ஜனாதிபதி ஊடகப் பிரிவு
இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்க ஜப்பான் தயார் என, அந்த நாட்டின் வௌிவிவகார இராஜாங்க அமைச்சர் மினோறு கியுச்சி தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று நாட்டுக்கு வந்த இவர், இன்று காலை ஜனாதிபதியை சந்தித்தவேளையே இவ்வாறு கூறியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
நீண்டகாலமாக அபிவிருத்தி சார்ந்த உதவிகளை வழங்கி வரும் ஜப்பான், சர்வதேச அரங்கிலும் இலங்கைக்கு உதவிகளை வழங்கி வருகின்றமை தொடர்பில் ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் கூறியுள்ளது.