இலங்கையில் ஜனநாயகத்தை பாதுகாக்கவும் இனப்பதற்றத்தை இல்லாதொழிக்கவும் இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கும் அமெரிக்கா உதவி செய்யும் என்று, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பிராந்திய விவகார பணிப்பாளர் நெய்ல் ரோமாஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த முன்னெடுப்புக்கள், ஏதேச்சதிகார அரசாங்கத்தை வீழ்த்திய புதிய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இனப்பதற்றத்தை தவிர்க்க புதிய அரசாங்கத்துக்கு அமெரிக்கா உதவும் என்று நெய்ல் ரோமாஸ் குறிப்பிட்டுள்ளார்.