மாலைத்தீவு தொடர்பில் இன்று (04) பாராளுமன்றத்தில் புதிய பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தை தெளிவுபடுத்தினார்.
பாராளுமன்ற விவாதம்…
ரணில் விக்ரமசிங்க: முதற்தடவையாக மாலைத்தீவில் வீதியொன்று அமைக்கப்பட்டுள்ளது.
அனுரகுமார திசாநாயக்க: இந்த வீதியின் நிர்மாணப் பணிகளுக்காக 99 இலட்சம் டொலர்களை, அதாவது 13,000 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளது. எனினும், எவ்வித விலைமனுக்கோரலும் இன்றியே இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்க: இலங்கையின் ஒரு பகுதியாகவே மாலைத்தீவு கருதப்படுகிறது.
அனுரகுமார திசாநாயக்க: எமது நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு கருங்கற்களைக் கொண்டு செல்ல முடியாது. இலங்கையில் இருந்து கப்பல்களின் மூலம் கருங்கற்களைக் கொண்டு சென்றுள்ளனர். மாலைத்தீவில் வீதியொன்றை அமைப்பதற்காக கொண்டு சென்றுள்ளனர்.
ரணில் விக்ரமசிங்க: இலங்கையில் இருந்து அனுப்பப்படுவதில்லை.
அனுரகுமார திசாநாயக்க: கருங்கற்களை இலங்கையில் இருந்து கொண்டு செல்ல முடியாது என இந்த பாராளுமன்றத்திலேயே சட்டம் நிறைவேற்றப்பட்டது. எனவே, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு மாறாக தமக்கு வேண்டிய விதத்தில் செயற்படுவதற்கு எவருக்கும் உரிமை இல்லை. அவ்வாறென்றால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தினால் என்ன பலன்?
ரணில் விக்ரமசிங்க: இது தொடர்பில் நான் முழுமையான அறிக்கையொன்றை சபைக்கு முன்வைப்பேன்.