Breaking
Sat. Jun 21st, 2025

இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ள படை வீரர்கள் சட்ட ரீதியாக இராணுவத்தை விட்டு விலகுவதற்கான பொது மன்னிப்பு காலம் இன்று தொடக்கம் எதிர்வரும் 16ம் திகதிவரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலத்தில் படை வீரர்கள் தங்களது படைப் பிரிவு அலுவலகத்திற்குச் சென்று சட்ட ரீதியாக இராணுவத்தில் இருந்து விலகிச் செல்ல முடியும் என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பரிந்துரைக்கு அமைய இத்திட்டம் செயற்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post