இஸ்ரேலிய பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கெடுப்பு நேற்றுச் செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது இத்தேர்தலில் பிரதமர் பெஞ்ஜமின் நெட்டான்யாஹுவின் கட்சிக்கும் மத்திய இடது சாரி கூட்டமைப்பு கட்சிக்கும் கடும் போட்டி நிலவுதாகக் கூறப்படுகிறது.
மத்திய இடது சாரி கூட்டமைப்பானது பலஸ்தீனம் மற்றும் சர்வதேச சமூகத்துடனான உறவுகளை மறுசீரமைப்பதாக உறுதியளித்துள்ளது.பிந்திய கருத்துக்கணிப்பு வாக்கெடுப்புகள் நெட்டான்யாஹுவின் கட்சியை விடவும் இடதுசாரி கூட்டமைப்பு 3 முதல் 4 ஆசனங்களை கூடுதலாக பெறும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றன.
தான் நான்காவது தடவையாக வெற்றிபெறும் பட்சத்தில் பலஸ்தீனத்தின் உருவாக்கத்திற்கு அனுமதிக்கப் போவதில்லை என பெஞ்ஜமின் நெட்டான்யாஹு சூளுரைத்துள்ளார்.
காலை 7.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணிவரை இடம்பெற்ற இஸ்ரேலின் 120 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான இந்தத் தேர்தலில் வாக்களிக்க சுமார் 6 மில்லியன் பேர் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.