Breaking
Sat. Jun 21st, 2025

இர்ஷாத் றஹ்மத்துல்லா

வடக்கில் நலிவுற்றிருக்கும் யுவதிகளின் வாழ்வாதார மேம்பாட்டுகளுக்காக எமது அமைச்சின் கீழ் இலவச தையல் பயிற்சிகளை வழங்குவதாக தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் இவ்வாறான பயிற்சிகளை கற்பதற்கு பெறும் தொகை பணத்தினை செலவழித்து செல்வதை காணமுடிவதாகவும் கூறினார்.

மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பெரியமடு கிராமத்த்தில் யுவதிகளுக்கான தையல் தையல் பயிற்சி நிலையத்தினை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த திட்டத்தின் மூலம் யுவதிகள் நன்மையடைய வேண்டும்.இலவசமாக இந்த பயிற்சிகள் நடத்தப்படுகின்றது.அதனை தொடர்ந்து உங்களது வருமானத்தை கவனத்திற்கொண்டு தேவையான மேலதிக உதவிகளும் வழங்கப்படவுள்ளது.இவற்றின் மூலம் நாம் எதிர்பார்ப்பது உங்களது வாழ்க்கை வளம் பெற வேண்டும் என்பதையே என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இதன் போது மேலும் கூறினார்.

இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்,மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சனுாஸ்,றியாப்,மன்னார் நகர சபை உறுப்பினர் நிலாமுதீன் நகுசீன்,மாந்தை உப்புக் கூட்டுத்தாபன தலைவர் எம்.அமீன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Related Post