Breaking
Sat. Jun 21st, 2025

மைத்திரியிடம் கெஞ்சிய மொஹான் பீரிஸ்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், தன்னைத் தொடர்ந்தும் பிரதம நீதியரசராகச் செயற்பட அனுமதிக்குமாறு மொஹான் பீரிஸ் கெஞ்சியதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் காலையில் மொஹான் பீரிஸ் தன்னிடம் தொலைபேசியில் பேசியதாக, அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தகவல் வெளியிட்டார்.

தன்னை தொடர்ந்தும் பிரதம நீதியரசராக இருக்க அனுமதிக்கும்படியும், அவ்வாறு செய்தால், உங்களுக்குத் தேவையான வகையில் தீர்ப்புகளை அளிப்பேன் என்றும் மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதற்கு ஜனாதிபதி அதற்கு மறுத்து விட்டார். புதிய அரசு ஜனநாயகம், நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சியை மீண்டும் ஏற்படுத்துவதாக வாக்குறுதி கொடுத்தே பதவிக்கு வந்துள்ளது.

மொஹான் பீரிசின் இதுபோன்ற செயற்பாடுகளுக்கு தற்போதைய அரசு இடமளியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Post