மன்னார் மாவட்டத்தின் மாந்தைமேற்கு பிரதேச சபைக்குட்பட்ட மஹலிக்குளம் – பள்ளமடு வீதி, விடத்தில்தீவு சந்தியிலிருந்து பெரியமடு வரைக்குமான 12 கிலோ மீட்டர் பாதை காபர்ட் பாதை புனரமைப்பு பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.
ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவியான 450 மில்லியன் ரூபா நிதியில் இந்த பாதை புனரமைப்பு செய்யப்படவுள்ளது. கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீனின் முயற்சியினால் இந்த நிதி பெறப்பட்டது.
இந்த நிகழ்வு வடமாகாண போக்குவரத்து,மற்றும் வர்த்தக அமைச்சர் பா.டெனீஸ்வரன் தலைமையில் இடம் பெற்றது.
இதில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாகவும், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கௌரவ அதிதியாகவும், வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, மாந்தை மேற்கு பிரதேச சபை தலைவர், நானாட்டான் பிரதேச சபை தலைவர் மற்றும் பிரதேச சபைகளின் உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டனர்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இந்த புனரமைப்பு பணிகள் நிறைவுறும் என இங்கு உரையாற்றும் போது அமைச்சர் றிஷாத் பதியுதீன் கூறினார்.