ஊடகப் பிரிவு
அமைச்சர் றிசாத் பதியுதீனின் தலைமையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பயணத்தில் எந்த தடைகள் வந்தாலும் அவற்றை தாண்டி அதனை நாம் பெற்றுக் கொடுப்போம் என முசலி பிரதேச சபை தவிசாளர் எஹியான் தெரிவித்தார்.
முசலி பிரதேசத்தின் தம்பட்டை முதலியார் கட்டு கிராம பள்ளிவாசல் முன்றலில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போது கலந்து கொண்டு உரையாற்றும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு மேலும் தவிசாளர் உரையாற்றுகையில் –
சிலலர் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸினை பயன்படுத்தி அரசியலில் அடையாளப்படுத்தப்படுகின்றனர்.பிறகு அவர்கள் இந்த கட்சிக்கு துரோகம் இழைத்துவிடுகின்றனர்.அதற்காக அவரை பழிவாங்கவே,மக்களை பலி வபாங்கவோ நாம் ஒரு போதும் சிந்தித்தில்லை.அவர்கள் அப்படியான அரசியல் நாகரிகத்தை கொண்டுள்ளார்கள் என்பதற்காக மக்களுக்கு கிடைக்கும் அபிவிருத்திகளை நாம் நிறுத்தமாட்டோம்.
இந்த மக்களின் தேவைகள் ஏராளம் ஒவ்வொரு கிராமத்துக்கு நாம் எமது தலைவருடன் சென்றுவந்தோம்,அங்குள்ள பிரச்சினைகளை வேறு எந்த வொரு அரசியல் வாதியினாலும் தீர்த்து வைக்க முடியாது.அதற்கான முன தைரியம் அந்த அரசியல் வாதிகளிடம் இல்லை.ஆனால் எமது தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு அல்லாஹ் அப்படியாதொரு சக்தியினை கொடுத்துள்ளான்.
ஆவர்களுக்கு எதிராக வந்த தடங்கள் வேறு எந்த அரசியல்வாதிக்கும் வந்திருக்காது.இல்லாத பொல்லாத கதைகளை கூறிn தாங்கள் பிரபல்யம் தேட வேண்டும் என்பதை இலக்காக கொண்டு செயற்படும் அரசியல்வாதிகளும் இருக்கின்றார்கள்.
வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் என்பது ஒட்டு மொத்த முஸ்லிம்களின் நிம்மதியான வாழ்வில் தங்கியிருக்கின்றது.எமது சமூகம் வேதனைப்படுகின்ற போது நாம் மட்டும் அரசியல் அந்தஸ்த்தில் இருந்து கொண்டு தம்பட்டம் அடிப்பதில் என்ன நியாய தன்மையினை காணமுடியும்.
நாம் இன்று மறிச்சுக்கட்டியில் ஆரம்பித்த இந்த மக்கள் சந்திப்பு மிகவும் வெற்றியளித்துள்ளது.மக்களது பல்வேறு பிரச்சினைகளுக்கு எமது தலைவர் தீர்வினை பெற்றுக் கொடுத்துள்ளார் என்றும் முசலி பிரதேச சபை தவிசாளர் எஹியான் மேலும் கூறினார்.