ஊடகப் பிரிவு
எனக்கு எதிராக ,லஞ்சம் அல்லது ஊழல் சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டை அவசரமாக விசாரணை செய்து நாட்டு மக்களுக்கு முடிவுகளை அறிவிக்குமாறு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் ஆணைக்குழு தலைவரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு எதிராக இன்று வியாழக்கிழமை (06) ,லஞ்சம் அல்லது ஊழல் சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.
அதற்கு இணங்கவே அமைச்சர் மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் அவ் விசாரணைக்காக தான் பூரண ஒத்துழைப்புக்களையும் வழங்க தயாராக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2013 ஆம் ஆண்டு நடைபெற்ற வடமாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பாக போட்டியிட்டு தோல்வியிடைந்த ஒருவரினாலேயே இம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.