Breaking
Tue. Apr 29th, 2025
எனக்கு விசுவாசமான தரப்பினர் மீது வழக்குகளைத் தொடர்ந்து அவர்களை அச்சுறுத்தி ஆளும் கட்சியில் இணைத்துக் கொள்ள முயற்சிக்கப்படுகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனினும், இனி வரும் காலங்களில் எதிர்க்கட்சியில் இருக்கும் எவரும் ஆளும்கட்சியில் இணைந்து கொள்ள மாட்டார்கள்.

ஆளும் கட்சியுடன் இணைந்து கொள்ளும் தரப்பினர் ஏற்கனவே இணைந்து கொண்டுள்ளனர்.

அரசாங்கம் வெறுமனே அவர் இணைகின்றார். இவர் இணைகின்றார் என பிரசாரம் செய்கின்றது.

இனி எதிர்க்கட்சியின் எவரும் ஆளும் கட்சிக்கு ஆதரவளிக்கப் போவதில்லை.

எனக்கு ஆதரவான தரப்பினரை ஆளும் கட்சியில் இணைத்துக் கொள்ள பெரும் முயற்சி எடுக்கப்படுகின்றது.

எனினும், இந்த முயற்சிகள் ஒருபோதும் வெற்றியளிக்காது என மஹிந்த ராஜபக்ச சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

By

Related Post