Breaking
Sun. Jun 15th, 2025

இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ்-

என்னால் செய்யப்பட்ட அனைத்து அபிவிருத்தி திட்டங்களின் பின்னணியில் அமைச்சர் றிசாத் பதியுதீனின் பங்களிப்பு உள்ளது என தெரிவித்துள்ள வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எச்.எம்..றியாஸ் நான் மாகாண சபையின் உறுப்பினராக தெரிவாவதற்கும் காரணமாக இருந்தவரும் அவரே என்றும் கூறினார்.

மதுரங்குளி கஜூவத்தை பாடசாலையின் நிகழ்வு நேற்று மாலை இடம் பெற்றது அதில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அவர் தமதுரையில் –

அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களை எனது அரசியல் வாழ்வில் மறக்க முடியாது.எனக்கு இன்னும் ஞாபகமிருக்கிறது. நான் வடமேல் மாகாண சபை உறுப்பினர் வேட்பாளராக போட்டியிட்ட போது ஆனமடுவ மதவாக்குளம் கிராமத்தில் இடம் பெற்ற கலந்துரையாடலொன்றின் போது எனக்கு வாக்களிக்குமாறு அமைச்சர் பிரசாரம் செய்தார்.அப்போது அங்கிருந்த பள்ளிவாசல் சபையினர் உதவியொன்றினை கேட்டனர்.அமைச்சர் அப்போது உடனடியாக அதனை செய்து கொடுத்தார்.அதனை கண்ட எனக்கு கண்ணீர் வந்தது.

புத்தளத்தின் அரசியல் பிரதி நிதித்துவம் பாதுாக்கப்பட வேண்டும் என்பதில் அவர் மிகவும் அவர் கரிசனையுடன் செயற்பட்டு வந்துள்ளார்.அவர் வன்னி மாவட்ட வாக்குகளை கொண்டிருந்த போது,புத்தளம் மாவட்ட எமது மக்களின் மீது அதிக அன்பு கொண்ட ஒருவராக இருந்துவந்துள்ளதை காணமுடிகின்றது.

இன்று இலங்கை அரசியலில் மிகவும் முக்கியத்துவம் கொண்ட ஒருவராக அமைச்சர் றிசாத் பதியுதீன் இருக்கின்றார்.அவர் மூலம் எமது கிராமங்களும் எதிர்காலத்தில் நன்மையடையும் என்றும் முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் றியாஸ் கூறினார்.

இந்த மதுரங்குளி பிரதேசத்தில் உள்ள பல பாடசலைகளை் முன்னாள் வடமேல் மாகாண கல்வி அமைச்சர் அத்துல விஜயசிங்கவின் நிதியின் மூலம் அபிவிருத்தி கண்டுள்ளது.அந்த வகையில் கஜூவத்தை பாடசாலைக்கும் எமது நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

Related Post