Breaking
Sun. Oct 13th, 2024

– இஷ்ஹாக் – நிந்தவூர் –

முகா தலைவர் ஹக்கீம் ஆட்டுக்குட்டியுடன் நிற்பதையும் .அ.இ.ம.கா தiலைவர் ரிசாத் பதியுதீன் ஆதரவற்ற ஏழைக் குடிசைகளுக்குள் அதிகாலை வேளை சென்று அவர்களது குறை நிறைகளை கேட்டறிந்ததையும் ஒப்பிட்டும் ஒப்பிடாமலும் ஏட்டுக்குபோட்டியான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.

ஹக்கீம் ஆட்டுக்குட்டியுடன் நிற்பது என்பது முகா போராளிகளை குசிப்படுத்துவற்காகவும் அந்த போராளிகளின் முகநூல்களை அலங்கரிப்பதற்காகவும் எடுக்கப்பட்ட புகைப்படங்களே ஒழிய அதில் எந்தவித சமுக நலனும் இல்லை.

ஆட்டுக்குட்டியை தூக்குவதனால் முஸ்லிம்களுக்கோ, முஸ்லிம் சமுகத்திற்கோ எந்தவித நன்மையையும் ஏற்படப் போவதில்லை.

இனப்பிரச்சினைக்கான தீர்வு, அரசியல் அமைப்பு மாற்றம், தேர்தல் முறை மாற்றத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவ பின்னடைவு என முஸ்லிம் சமுகம் மிகவும் ஒரு பாதகமான காலகட்டத்தை எதிர்நோக்கியிருக்கும் இந்த வேளையில் ஹக்கீமுக்கு ஆட்டுக்காலைக்குள் ஆடுகளுடன் என்ன வேலை என்பதுதான் எமது இந்த விமர்ச்சனத்தின் நோக்கமாகும்.

ஆட்டுக்காலைக்குள் பல மணிநேரம் சென்று ஆடுகளை தூக்கி கொஞ்சி விளையாடும் அளவுக்கு ஹக்கீமுக்கு அமைச்சு தொடர்பானதோ முஸ்லிம் சமுகம் தொடர்பானதோ, முஸ்லிம் இளைஞர்களின் வேலைவாய்ப்பு தொடர்பானதோ எந்த வித நோக்கமுமில்லை, வேலைப்பழுவுமில்லை என்பதையே மறுபக்கம் ஹக்கீமின் ஆட்டுக்குட்டிப் படங்கள் எடுத்துக் காட்டுகின்றன. உண்மையில் ஹக்கீம் தன்னால் இயலுமானதையும் அவரது சக்தியையும் அந்தப் புகைப்படங்கள் மூலம் வெளிக்காட்ட விரும்புகின்றார்.

முகா போராளிகளை ஆடு, மாடுகளைப் போன்ற கால்நடைகளாகவே கடந்த 16 வருடங்களாக பார்த்துப் பழகிப் போன தால் தான் அவர் இந்த நிமிடம் வரை அவரது கட்சிப் போராளிகளையும் முஸ்லிம் சமுகத்தையும் அவ்வாறு பார்க்கின்றார் என்பதற்கு இப்புகைப்படங்கள் சிறந்த எடுத்துக்காட்டாகவுமுள்ளன.

முகா தலைவர் ஹக்கீம் இவ்வாறு ஆடுகளுடன் புகைப்படம் எடுத்திருக்கின்ற அந்த வேளையில் தான் மர்ஹூம் அஸ்ரபின் ஞாபகம் எம்மை ஒட்டிக்கொள்கின்றது.

பாராளுமன்றம் என்னும் உயர் சபையிலிருந்து கீழ் மட்டம் வரையிலான ஏழைகளின் குடிசைகள் வரை அஸ்ரப் பயணித்த காலம் இன்றும் யாராலும் மறக்க முடியாது. அஸ்ரபின் மரணத்தோடு அந்தக் காலமும் நிறைவடைந்து விட்டது.

ஏழைகளின் குடிசைகளுக்கு செல்லும் அஸ்ரப் ‘ என்னம்மா சௌக்கியமா’ என்று கேட்டு புகைப்படம் எடுத்து விட்டு மட்டும் வருவதில்லை. அந்தக் குடிசைக்குள்ளிருந்து வெளியேறிய மறுநிமிடமே அல்லது மறுநாளே அந்தக் குடிசைக்குள் இருந்த தாய்மார்களினதும் திருமணம் முடிக்காத குமர்களினதும் ஆதங்கங்கள் தீர்க்கப்பட்ட சரித்திரமே அன்று நடந்தது.

தொழில் வாய்ப்பாக இருக்கட்டும், வாழ்வாதார பிரச்சினையாக இருக்கட்டும், சுயதொழிலுக்கான ஊக்கிவிப்பு செயற்பாடாக இருக்கட்டும் அவை அனைத்தும் அஸ்ரபின் உத்தரவின் பெயரில் மிக மிக விரைவில் தீர்ந்ததுன் அன்றைய சரித்திரங்களில் ஒன்றாகும்.

1984ஆம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸ் என்னும் கட்சி செயல் வடிவம் பெற்று 2000ம் ஆண்டில் தலைவர் அஸ்ரபின் மரணம் வரை 16 வருடங்கள் அஸ்ரப் என்னும் ஆளுமை கோலோச்சியது.

முஸ்லிம்களின் தலைமைத்துவமான அஸ்ரப் என்னும் நாமம் மரணமடைந்த காலமும் அன்றிலிருந்து இன்றுவரையான அதாவது 2000 – 2016 வரையான மற்றுமொரு 16 வருடங்கள் முகா என்னும் கட்சி சீரழிக்கப்பட்டதும் முஸ்லிம் சமுகம் இருண்ட யுகத்திற்குள் சிக்கிக் கொண்ட நிலையில் தான் அஸ்ரபை நினைவு படுத்தும் முகமாக அஸ்ரபின் வழிகாட்டலில் சரியாக 16 வருட காலத்தின் பிற்பாடு ரிசாத் பதியுதீன் என்னும் ஒரு நபரை இறைவன் முஸ்லிம்களுக்காக இன்று அடையாளப்படுத்தியுள்ளான்.

யாழ் மாவட்டத்திற்கு கடந்த ஓர் இரு தினங்களுக்கு முன் விஜயம் செய்திருந்த அமைச்சர் ரிசாத் பதியுதீன் அந்த விஜயத்தில் ஒரு நாள் அதிகாலை வேளை சுபஹூத் தொழுகையை தொடர்ந்து எந்தவித பாதுகாப்புமின்றி தனிநபர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கு கூடாரங்களில் வாழும் ஏழை முஸ்லிம்களின் குடிசைக்குள் அதிரடியாக விஜயம் செய்து அவர்களது குறைநிறைகளை கேட்டறிந்த சம்பவம் இடம்பெற்றது.

அமைச்சர் என்ற ரீதியில் தனக்குள்ள பாதுகாப்பு பிரிவினரையெல்லாம் ஒதுக்கிவிட்டு அவ்வாறான ஏழைகள் அணியும் ஆடைகளை அணிந்து கொண்டு உண்மையாக அம்மக்களின் குறைகளை அறியும் நோக்குடன் தான் இந்த விஜயத்தை ரிசாத் மேற்கொண்டிருந்தார்.

இதைத்தான் அன்று அஸ்ரப் செய்திருந்தார். அதைத்தான் இன்று ரிசாத் செய்திருக்கின்றார்.

முகா ஸ்தாபகத் தலைவர் மாமனிதர் அஸ்ரப் முஸ்லிம் சமுகத்தை எவ்வாறு கட்டியெழுப்பினாரோ எவ்வாறு இருக்க வேண்டும் என கனவு கண்டாரோ அந்த இலட்சியம், கனவு ஹக்கீம் என்னும் ஆளுமையற்றவரினால் சுக்குநூறாக்கப்பட்ட இந்த வேளையில் தான் மீண்டும் அஸ்ரப் விட்டுச் சென்ற கனவு , இலட்சியம் இன்று ரிசாத் என்னும் ஆளுமையினால் உயிர்பெற்றுள்ளது.

By

Related Post