Breaking
Mon. Mar 17th, 2025
ஐக்கிய தேசியக் கட்சியின் 70வது வருடாந்த மாநாடு எதிர்வரும் சனிக்கிழமை  கொழும்பு கம்பெல் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது
.
அனைத்து தேர்தல் தொகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். ஐhதிக சேவக ஊழியர்கள் சங்கம் மகா நாடு தொடர்பாக தெரிவிக்கையில் 30ற்கும் மேற்பட்ட தொழிற்சங்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் மகா நாட்டில கலந்து கொள்ள உள்ள விருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இஸ்லாமிய மத வழிபாடுகள் கொழும்பு மாளிகாவத்தை ஜும்மா பள்ளிவாசலில் இன்று மாலை 6.00 மணிக்கு இடம்பெறும். இந்துமத வழிபாடுகள் கொழும்பு கொட்டாஞ்சேனை கோவிலில் இரவு 7.00மணிக்கு நடைபெறவுள்ளது. கிறிஸ்தவ மத வழிபாடுகள் வத்தளை புனித அன்னம்மாள் தேவாலயத்தில் நாளை பிற்பகல் இடம்பெறும். இந்த சமய வழிபாடுகளில் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளார்.

By

Related Post