ஐநா மனித உரிமை பேரவையின் 28வது கூட்டத்தொடர் இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர விசேட உரையாற்றவுள்ளார்.இலங்கை நேரப்படி பிற்பகல் 1.20 மணிக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் தனது உரையை நிகழ்த்தவுள்ளார்.
மேலும் இவ்விஜயத்தில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் அல் ஹுசைனுக்கும் வெளிவிவகார அமைச்சருக்கு இடையிலான சந்திப்பொன்றும் இடம்பெறவுள்ளத என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.