ஈராக்கில் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி ஐ.எஸ். தனிநாடு அமைத்துள்ளனர். அங்கு கடுமையான சட்டங்களை அமல்படுத்தி வருகின்றனர்.
கொலை, கொள்ளை மற்றும் கள்ளக்காதல் போன்றவைகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. கள்ளக்காதலில் ஈடுபடுபவர்களை பொது இடத்தில் வைத்து கல்லால் அடித்து கொல்லப்படுகின்றனர்.
அது போன்ற சம்பவம் சமீபத்தில் நடந்தது. வட ஈராக்கில் தங்கள் கட்டுப்பாட்டிற்குட்பட்ட மொசூல் நகரில் கள்ளக்காதலில் ஈடுபட்ட ஜோடிகள் இழுத்து வரப்பட்டனர். பின்னர் பொதுமக்கள் கூடும் நடுத் தெருவில் நிற்க வைத்து கல்லால் அடித்து கொன்றனர்.
இக்காட்சியை ஏராளமான பொதுமக்கள் கூடி நின்று பார்த்தனர்.