Breaking
Sat. Jun 21st, 2025

கடவுச்சீட்டுகளை விநியோகிக்கும் போது விண்ணப்பதாரிகளின் கைவிரல் அடையாளங்களை பெற்றுக் கொள்ளும் வகையில் குடிவரவு  குடியகல்வு திணைக்கள சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை  அனுமதியளித்துள்ளது.

 இதற்கிணங்கள 1948/ 20 ஆம் இலக்க குடிவரவு  குடியகல்வு சட்டத்தில் கடவுச்சீட்டுகளை  வழங்கும் போது விண்ணப்பதாரிகளின் கைவிரல் அடையாளங்களைப்  பெற்றுக்கொள்ளும் வகையில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான சட்ட மூலமொன்றை பாராளுமன்றத்தின் அனுமதிக்காக  சமர்ப்பிப்பதற்காக சமாதானம் அனர்த்த முகாமைத்துவம் மற்றும் மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க அமைச்சரவையில் சமர்ப்பித்த யோசனைக்கே அங்கீகாரமளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் வகையில் பாகிஸ்தானுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்காக அமைச்சர் ஜோன்  அமர துங்கவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை திட்டத்துக்கும் அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

Related Post