கண்டி மாவட்ட மக்களுடனான சந்திப்பு!

 
06 மாத கால அநியாய சிறைப்படுத்தலின் பின்னர், மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், கடந்த இரு வாரங்களாக மக்கள் சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றார்.
 
அதன் தொடர்ச்சியாக, கண்டி மாவட்ட மக்களின் வேண்டுகோளின் பேரில், இன்று காலை (18) மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்து, அங்குள்ள மக்களை சந்தித்துக் கலந்துரையாடினார்.
மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட மத்திய குழுவின் ஏற்பாட்டில் குறித்த மக்கள் சந்திப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
 
 
இதன்போது, ஆதரவாளர்கள், கட்சித் தொண்டர்கள், முக்கியஸ்தர்கள், புத்திஜீவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் தலைவர் ரிஷாட் பதியுதீனைக் காண ஆவலுடன் வருகை தந்திருந்தனர்.
 
இதேவேளை, தனது விடுதலைக்காகப் பிரார்த்தித்த அனைவருக்கும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், தனது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்.