கற்குழிப் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு!

-ஊடகப்பிரிவு-

கிண்ணியா பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சூரங்கல் வட்டார வேட்பாளர் ஐவ்பரை ஆதரித்து கற்குழிப்பிரதேசத்தில் நேற்று மாலை (28) மக்கள் சந்திப்பொன்று இடம்பெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் விவகாரப் பணிப்பாளரும், கிண்ணியா முன்னாள் மேயருமான டாக்டர். ஹில்மி மஹ்ரூபின் தலைமையில்  இடம்பெற்ற இந்த சந்திப்பில், ஊர்ப்பிரமுகர்கள், மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் என பலர் பங்கேற்றனர்.