Breaking
Fri. Jun 20th, 2025
மட்டக்களப்பு – கல்குடா கல்வி வலயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிகிருஸ்ணராஜா தெரிவித்தார்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த தடை அமுலுக்கு வரவுள்ளது.
இதற்கான சுற்றுநிருபங்கள் வலயத்திலுள்ள பாடசாலைகளின் அதிபர்களுக்கு மாணவர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், தனியார் கல்வி நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் அறநெறிக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அதேநேரம், இதனை மீறும் தனியார் கல்வி நிலைய முகாமையாளர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றும் எச்சரித்துள்ளார்

Related Post