Breaking
Fri. Mar 21st, 2025

பொது பல சேனா அமைப்பின் அம்பாறை மாவட்டத்துக்கு பொறுப்பாகவுள்ள பௌத்த பிக்கு கல்முனையில் தமிழ் முஸ்லிம் மக்களிடையே குழப்பத்தை உண்டு பண்ண முஸ்தீபு.

கல்முனை தமிழ் பிரதேசங்களில் உள்ள முச்சக்கர வண்டி சாரதிகளால் இன்று நடாத்தப்படவிருந்த எதிர்ப்பு ஊர்வலமும் உண்ணாவிரதப் போராட்டமும் கல்முனைப் பொலிஸாரின் தலையீட்டையடுத்து நீதி மன்றத்தினால் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது.

கல்முனை பிரதேசத்திலுள்ள தமிழ் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு கல்முனை நகரில் முச்சக்கர வண்டி நிறுத்துவதற்கு இன்னுமொரு தரப்பினரால் தடை விதிக்கப்படுவதாகவே இந்த எதிர்ப்பு பேரணி இன்று நடை பெறவிருந்தது.

எனினும் முச்சக்கரவண்டி சாரதிகள் கல்முனை தபாலகத்துக்கு முன்பாக ஒன்று கூடி பதாகை ஏந்தி தங்களது எதிர்பினை தெரிவித்தனர். அந்தப் பதாகையில் அதிமேதகு ஜனாதிபதி அவர்களே எங்களுக்கான தீர்வினைப் பெற்றுத் தாருங்கள் என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது.

இதே வேளை இந்த எதிப்பு நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கும் வகையில் பொது பல சேனா அமைப்பின் அம்பாறை மாவட்டத்துக்கு பொறுப்பாகவுள்ள சஞ்சீர என்ற பௌத்த பிக்கு அங்கு அரச வாகனமொன்றில் வருகைதந்து சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இவ்விடயம் தொடர்பாக கல்முனை மாநகர முதல்வரை தொடர்பு கொண்டு கேட்டபோது இவ்விடயம் தொடர்பாக இரு சுற்றுப் பேச்சு நடாத்தியூள்ளோம். அடுத்த கட்டமாக இரு தரப்பினரையும் ஒன்றாக சந்தித்து பேசி இறுதி முடிவு எடுக்கவுள்ளதோடு இவ்விடயங்கள் பற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜாவுக்கும் சட்டத்தணி சுமந்திரனுக்கும் அறிவித்துள்ளேன் என கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

இவ்விடயமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொது செயலாளர் மாவை சேனாதிராஜாவை தொடர்பு கொண்டு கேட்டபோது இவ்விடயம் பேசித் தீர்வு காணக்கூடியதாகும் கல்முனை முதல்வருடன் பேசி சுமுகமான தீர்வை ஏற்படுத்தலாம் என தெரிவித்தார். (zn)

Related Post