Breaking
Sat. Jun 21st, 2025

கஹவத்தை, கொட்டஹேதன பிரதேசத்தில் வீட்டிலிருந்து 39வயதான பெண்ணை, இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலிருந்து காணவில்லை என்று தெரிவித்துள்ள பொலிஸார், அவரை தேடும் பணிகளை துரிதப்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தினால் கொட்டஹேதன கிராமவாசிகள் மீண்டும் குழப்பமடைந்துள்ளனர். சந்தேகநபரோ அல்லது காணாமல் போன பெண் தொடர்பிலோ இதுவரையிலும் எவ்விதமான தகவல்களும் கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

தனது மனைவியை இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.45 மணியிலிருந்து காணவில்லை என்று வர்த்தகரான அவருடைய கணவன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

கொட்டஹேதன பிரதேசத்தில் கடந்த வருடம் பெண்கள் மட்டுமே கொலைச்செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

பிந்திக்கிடைத்த தகவல்களின் படி, குறிப்பிட்ட பெண் காணாமல் போன வீட்டின் சில பகுதிகளில் இரத்தக் கறை பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் கிராமவாசிகள் மத்தியில் குழப்ப நிலை காணப்படுவதாக தெரிய வருகிறது.

கீழுள்ள படத்தில் கடந்த வருடம் நடைபெற்ற கொலையில் உயிரிழந்தவர்கள்.

Related Post