Breaking
Mon. Jan 20th, 2025

கடந்த காலங்களில் காணாமல் போனதாகக் கூறப்படும் தமது பிள்ளைகள், வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று பொது ஒழுங்குகள், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்கவிடம் காணாமல் போனவர்களின் உறவினர்கள் நேற்று புதன்கிழமை (28) முறையிட்டனர்.  அமைச்சர் அமரதுங்கவை நேற்று சந்தித்த, காணாமல் போனவர்களின் உறவினர், வெலிக்கடை சிறைச்சாலையில் தங்களது பிள்ளைகள் இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில், அது குறித்த உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர். சிறைச்சாலையில் அண்மையில் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், ஊடகங்களில் வெளியாகியிருந்த நிலையில், அவற்றில் தமது பிள்ளைகள் காணப்பட்டதாக அமைச்சரிடம், அப்பிளைகளின் உறவினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அவர்களின் கோரிக்கைகளை செவிமெடுத்த அமைச்சர், இது குறித்து தாம் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் உறுதியளித்தார்.

Related Post