ஏறாவூர் அபூ பயாஸ்
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆஸ்பத்திரி வீதி, ஏறாவூர் -3A ஐ சேர்ந்த சம்மூன் குட்டி முஹம்மது ரஷீத் (வயது -29) என்பவர் சென்ற திங்கட் கிழமையிலிருந்து (09.03.2015) காணாமல் போயுள்ளார் என்ற செய்தியை பல்வேறு ஊடகங்களும் வெளியீட்டு இருந்தது .
இவ் ஊடகச் செய்திகளை கவனத்தில் கொண்ட பொதுமக்கள் மிகவும் விழிப்பாக இருந்து, இவரை கண்டுபிடித்துக் கொடுத்துள்ளனர்.
ஏறாவூரிலிருந்து கொழும்புக்கு அரிசி ஏற்றிச் செல்லும் லொறியில் நடத்துனராக புதிதாக சென்ற இவர், வழி மாறி பல்வேறு இடங்களிலும் அலைந்து திரியும்போது ராஜகிரிய எனும் இடத்தால் இவர் நடந்து செல்லும் போது ஊடகச் செய்தி வாசித்த நபரொருவர் இவரை அழைத்து வந்து அவரது மச்சான் ஐஸ் வாடி மன்சூருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்ப்படுத்தி ஒப்படைத்துள்ளார். அல்ஹம்துலில்லாஹ்
இவரை கண்டுபிடிக்க உதவியாக இருந்த அனைத்து ஊடகங்களுக்கும், கண்டு பிடித்துக் கொடுத்த சகோதரருக்கும் உறவினர்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.