கிண்ணியா, குறிஞ்சாக்கேணி விபத்தில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் விஜயம்!

நேற்று (23) கிண்ணியா, குறிஞ்சாக்கேணியில் படகுப் பாதை விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் ஜனாஸா வீடுகளுக்கு இன்று (24) விஜயம் செய்த மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இதன்போது, மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும் உடன் விஜயம் செய்திருந்தனர்.