Breaking
Sat. Jun 21st, 2025

கியூபாவை பயங்கரவாத நாடுகள் பட்டியலில் இருந்து நீக்குவதாக  அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இந்த நேற்று இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

கியூபாவிற்றும் அமெரிக்காவுக்கும் இடையில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக பகை நிலவி வந்தது.

எனினும் கடந்த வாரம் அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி, கியூப உயர் மட்டத் தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார்.

அதனை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கும் கியூப தலைவர் ராகுஸ் கெஸ்ரோவிற்கும் இடையிலான நேரடி சந்திப்பு இடம்பெற்றது.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பினை அடுத்தே அமெரிக்க ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post