இரத்தினபுரி, கொடக்கவெல, யஹளவெல கிராமத்துக்குள் கடந்த சில நாட்களாக நாகபாம்புகள் நுழைவதால் அக்கிராம மக்கள் பெரும் அச்சத்தின் மத்தியில் வாழ்ந்து வருகின்றன.
இந்த நாகங்களின் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருமாறு கொடக்கவெல பொலிஸாரின் உதவியை கிராமவாசிகள் நாடியதை அடுத்து நாகங்களைப் பிடிப்பதற்காக தேர்ச்சிபெற்ற இளைஞன் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவ்விளைஞனால் கடந்த மூன்று தினங்களில் 10 நாகபாம்புகள் பிடிக்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் 5 மற்றும் 6 அடி நீளமானவை எனவும் அந்த நாகங்களின் உடல் மிகவும் பருத்துக் காணப்படுவதாகவும் கிராமவாசிகள் தெரிவித்தனர்.
எவ்வாறெனினும், அக்கிராமத்துக்குள் தொடர்ந்தும் நாகங்கள் நுழைவதாகவும் அவற்றைப் பிடிக்குப் பணியில் அவ்விளைஞன் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் கிராமவாசிகள் மேலும் தெரிவித்தனர்.