கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு, கல்லடி சுவாமி விபுலானந்தா இசை, நடனக்கல்லூரியினல் மூன்றாம் வருடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் சுகயீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மாணவி இன்று காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தின் மல்லாவி, யோகபுரத்தைச் சேர்ந்த சி.வாமிலா (வயது 24)என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கல்லடி சுவாமி விபுலானந்தா இசை, நடனக்கல்லூரிக்கு பின்புறமாகவுள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்து கல்வி பயின்றுவந்த இந்த மாணவி, இரு தினங்களுக்கு முன்னர் வயற்றுவலி மற்றும் காய்ச்சல் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே குறித்த மாணவி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.