அஸ்ரப் ஏ சமத்
கிழக்கு மாகாண சபையின் விசேட அமர்வு இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் கூடப்பட்டது .
இவ்வமர்வின் போது சபையில் ஏக மனதாக மாகாண சபை உறுப்பினர் ஜமீல்அவரினால் முன்மொழியப்பட்ட பிரதி தவிசாளர் பதவிக்கு இரா துரைரத்தினம் தேர்வு செய்யப்பட்டு பின்னர் சபை தலைவர் தேர்வும் இடம் பெற்றது .
இதனை மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி முன்மொழிய சுகாதார அமைச்சர் மன்சூரால் ஆமோத்திக்கப்பட்டு சந்திர தாச கலபதி சபை தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் ஐந்து நிமிடம் சபை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் புதிய சபை தலைவரினால் கூடப்பட்டது.மீண்டும் இம்மாதம் 31 திகதி சபை கூடவுள்ளதாக புதிய சபை தலைவரினால் அறிவிக்கப்பட்டது .
இதனை தொடர்ந்து புதிய சபை தலைவர் தனது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார் .