Breaking
Thu. Jun 19th, 2025

குருநாகலில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசலை அகற்றி வேறு இடம்மொன்றில் அமைக்கவிருப்பதாக, அமைச்சர் நந்தமித்தர ஏக்கநாயக்க இதனைத் தெரிவித்துள்ளது.

அந்த பள்ளிவாசலுடன் இணைந்த தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.

இந்த பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியில் தொல்பொருட்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் பள்ளிவாசலை அகற்றுமாறு சிங்கள ராவய உள்ளிட்ட அமைப்புகள் கோரிக்கை விடுத்து, ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருந்தன.

இதன் போது அந்த அமைப்புக்கு எதிராக காவற்துறையினர் தாக்குதல் நடத்தி கலைத்திருந்தனர்.

தற்போது இந்த பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் ஆய்வு பணிகளை நடத்தி வருகின்றன.

Related Post