Breaking
Sat. Jun 21st, 2025

கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர், எர்ணாகுளம், பாலக்காடு, கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் 2 நாட்களுக்கு முன்பு இரவில் திடீரென நடுவானில் நெருப்புக்கோளம் தோன்றியதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பெரும் பீதி ஏற்பட்டது.

இந்த நெருப்புக் கோளம் எர்ணாகுளம் மாவட்டம் கரியமல்லூர் என்ற கிராமத்தின் திறந்தவெளி பகுதியில் விழுந்தது. இது பற்றிய தகவல் அறிந்ததும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு கிடைத்த பொருட்களை கைப்பற்றி ஆய்வை மேற்கொண்டனர்.

இது குறித்து இந்த ஆணையத்தின் விஞ்ஞானி குரியகோஸ் கூறுகையில், ‘‘எங்களது முதல் கட்ட ஆய்வில் கரியமல்லூர் கிராமத்தில் விழுந்தது, எரிகல் என்பது தெரிய வந்துள்ளது. அந்த இடத்தில் நாங்கள் சேகரித்த பொருட்கள் மிகவும் சிறிய அளவில் இருந்தன. எனினும், இவை அதிக எடையைக் கொண்டிருந்தன. இவற்றில் இரும்பும், நிக்கலும் அதிக அளவில் கலந்து காணப்படுகிறது. இது அதிக ஈர்ப்பு விசையுடன் பூமியில் விழுந்ததால்தான் பலத்த அதிர்வு ஏற்பட்டு உள்ளது. இது அபூர்வ வகை எரிகல் ரகத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம்’’ என்று தெரிவித்தார்.

Related Post