யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த 5ஆம் திகதி யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட குறித்த நபர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் மாரடைப்பு காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான தேவதாஸ் குணசீலன் (வயது 46) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.