-சற்றுமுன் சிரச – நிவ்ஸ்பெஸ்ட் FM வானொலியில் வாசிக்கப்ட்ட செய்தி எழுத்து வடிவில் உங்கள் பார்வைக்கும்-
கொழும்பு துறைமுகநகர திட்டத்தின் நிர்மாணப் பணிகள் இன்று நிறுத்தப்பட்டன
துறைமுக நகரின் நிர்மாணப் பணிகள் தொடர்பில் கடந்த சில தினங்களாகவே நியூஸ் பெர்ஸ்ட் கவனம் செலுத்தியிருந்தது.
இந்த நிர்மாணப் பணிகள் குறித்து அறிவதற்காக இன்றைய தினமும் நியூஸ் பெர்ஸ்ட் குழாத்தினர் துறைமுக நகரத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்ற பகுதிக்கு சென்றதுடன் இதன்போது அங்கு நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதை காண முடிந்தது.
இது தொடர்பில் துறைமுக நகரத் திட்டத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஜியேங் ஹுலியேங்கிடம் நியூஸ் பெர்ஸ்ட் வினவியபோது அரசாங்கம் வழங்கிய அறிவித்தலுக்கு அமைய கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததாக கூறினார்.