Breaking
Wed. Jun 18th, 2025
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, அரச அதிகாரத்தை பயன்படுத்தி கையகப்படுத்திய கொழும்பு பௌத்தலோக மாவத்தையில் உள்ள சர்வதேச பௌத்த மத்திய நிலையம் மற்றும் தக்ஷிணாராமய விகாரைக்கு நடுவில் அமைந்துள்ள காணியை (படலிவத்தை)  ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பினர் நேற்று 05-02-2015 பார்வையிட்டனர்.
அந்த காணியின் உரிமையாளர்களும் இவர்களுடன் சென்றிருந்தனர். அதில் ஒரு காணியில் ரஷ்யர்கள் சிலர் நிர்மாணிப்பு பணியொன்றில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த காணி தனது தந்தைக்கு சொந்தமானது என தந்தையை கொலை செய்து விட்டு, கோத்தபாய ராஜபக்ச காணியை பலவந்தமாக கைப்பற்றியதாக அங்கிருந்த யுவதி ஒருவர் கூறியுள்ளார்.
இது சம்பந்தமாக அந்த யுவதி நீதிமன்றத்திற்கு சென்றிருந்தார். அவரது தேசிய அடையாள அட்டையில் இந்த காணியின் விலாசமே குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பின் பிரதிநிதிகளான சட்டத்தரணி சுனில் வட்டகல, மாகாண சபை உறுப்பினர் வசந்த சமரசிங்க, நகர சபை உறுப்பினர் ஹேமந்த வீரகோன் உட்பட ஜே.வி.பியின் பிரதிநிதிகள் இந்த காணியை பார்வையிட்டனர்.

Related Post