Breaking
Sun. Jun 15th, 2025

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தான் வளர்த்து வந்த யானைக்குட்டிகள் இரண்டையும் மீள ஒப்படைத்து விட்டதாக சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்தார்.

இந்த இரண்டு யானைக்குட்டிகளும் பின்னவல சரணாலத்துக்கே ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த இரண்டு யானைக்குட்டிகளையும் கோத்தபாய ராஜபக்ச சட்ட ரீதியாகவே வளர்த்து வந்துள்ளார்.

எனினும் இவ்விரண்டு யானைக்குட்டிகளையும் தம்மால் பராமரிக்க முடியாது என்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் தன்னிடம் தெரிவித்ததாக பிரதி அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த யானைக்குட்டிகளுக்கு சரித்த, சாரிகா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் இதில் சாரிகா என்ற யானைக்குட்யே முன்னாள் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ளது என்றும் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related Post