நிலம் கையகப்படுத்தும் அவசர சட்ட மசோதாவுக்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வரும் அன்னா ஹசாரேவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசு நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் திருத்தங்களை செய்யாமல் அதை அவசரச் சட்டமாக நிறைவேற்றுவதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து அன்னா ஹசாரே பேரணி நடத்துவதாக திட்டமிட்டு இருந்தார். என்ன காரணத்தினாலோ பேரணியை இப்போது நடத்த முடியாது என்று ரத்து செய்துள்ளார். இந்நிலையில்தான் வேண்டிய திருத்தங்கள் மேற்கொள்ளமல், நிறைவேற்ற நினைக்கும் நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு காங்கிரஸ் ஒரு போதும் எந்த நிலையிலும் ஆதரவு தெரிவிக்காது என்றும், இதில் தங்களது நிலைப்பாடுதான் தம்முடைய நிலைப்பாடும் என்றும் சோனியா கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளதாகத் தெரிய வருகிறது.
மேலும், ஹசாரேவின் ஆதாரவையும் இவ்விஷயத்தில் சோனியா காந்தி கேட்டுள்ளார் என்றும் தெரிய வருகிறது. இவ்விஷயத்தில் சமரசம் ஏறபட்ட வேண்டும் என்று நிதின் கட்கரி சோனியாவுக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், சோனியா ஹசாரேவுக்கு கடிதம் எழுதியுள்ளத்துக் குறிப்பிடத்தக்கது.