சம்மாந்துறை, நெய்னாகாடு அல்-அக்ஸா வித்தியாலயத்தில் வாசிகசாலை திறந்து வைப்பு!

சம்மாந்துறை, நெய்னாகாடு அல்-அக்ஸா வித்தியாலய மாணவர்களின் நன்மை கருதி, அங்கு வாசிகசாலை ஒன்றை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று அல்-அக்ஸா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
 
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.எம். மாஹிர் கலந்துகொண்டதோடு, வித்தியாலய அதிபர் ஏ.பி. ஹிபத்துல்லா மற்றும் அல்-ஹாஜ் முஹமட் ரீஷா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
 
மாஹிர் அவர்களின் தனிப்பட்ட பங்களிப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள இவ் வாசிகசாலையில், மாணவர்களின் பத்திரிகை வாசிப்புத்திறனை ஊக்குவித்து, அவர்களின் உலக அறிவை மேம்படுத்தும் முகமாக தினசரி பத்திரிகைகள் மற்றும் பயனுள்ள புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.