Breaking
Sun. Jun 15th, 2025

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வாகனத்தின் இலக்கமானது இதுவரை இலங்கை வீதிகளில் பயணித்த வாகனங்களில் காணப்படாத அடையாளத்துடன் கூடிய இலக்கமாக அது அமைந்துள்ளது.

வாகனத்தின் முன் பகுதியில் 5 நட்சத்திரங்களும் பின் பகுதியில் 5 நட்சத்திரங்களும் காணப்படுகின்றன.

பீல்ட் மார்ஷல் ஒருவரின் வாகனம் செல்கிறது என்பதை ஏனையோர் அறிந்து கொள்ளும் வகையில் விசேட அடையாளமாக இந்த நட்சத்திரங்கள் அதில் பொறிக்கப்பட்டுள்ளன.

எஸ். 400 என்ற பென்ஸ் கார் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அது ஐப்ரைட் ரக வாகனமாகும். வாகனத்தின் இலக்கம் யு.ஏ.555 ஆகும். காரின் விலை சுமார் 34 லட்சம் ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post