பாலஸ்தீனத்திடமிருந்து ஆக்கிரமிக்கப்பட்ட தீவிரவாத நாடான இஸ்ரேல் சர்வதேச சட்டத்தை மதிக்கவில்லை என்று யூனிசெப் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக யூனிசெப் வெளியிட்ட அறிக்கையில்….
தடுப்புக்காவல், கண்காணிப்புகள் மற்றும் பரிந்துரைகள் என்ற பெயரில் பாலஸ்தீன குழந்தைகளை நடத்துவதில் இஸ்ரேல் ராணுவத்தினர் சர்வேதேச சட்டங்களை மீறுகின்றது என்று அறிக்கையில் கூறியுள்ளது.
162 குழந்தைகள் கண்களால் கட்டப்பட்டும், 189 குழந்தைகளின் கைகள் இறுக கட்டப்பட்டும் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு இருக்கின்றனர்.
கைது, சிறை அறை மாற்றம், விசாரணை மற்றும் தடுப்புக்காவலின் கீழ் 179 குழந்தைகள் அடக்குமுறையின் கீழ் உடல்ரீதியாக இஸ்ரேல் ராணுவத்தால் துன்புறுத்தப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச சட்டங்களையும், உலக நாடுகளையும் மதிக்காமல் தீவிரவாத தன்மையோடு 60 ஆண்டுகளாக பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன மக்களை கொன்று குவித்தும் அண்டை நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தியும் வரும் இஸ்ரேலின் ஆணவத்திற்கு முடிவுரை இல்லாமல் இருந்து வருகிறது.