Breaking
Fri. Jun 20th, 2025

இலங்கை உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்த குற்ற மீறல்கள் குறித்த சர்வதேச விசாரணையை எதிர்ப்பதில் இலங்கை ஐக்கியப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தமது நாடு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சர்வதேச விசாரணை நடத்துவதை இலங்கை மக்களும் அரசியல் வாதிகளும் ´அவமானமாக´ கருதுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டுபாயில் நடைபெற்று வரும் கல்வி மாநாடு ஒன்றில் கலந்து கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ´IBTimes UK´ என்ற ஊடகத்திற்கு அளித்துள்ள விசேட பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சர்வதேச விசாரணையை முழு நாடும் எதிர்ப்பதாகவும் உள்விவகாரத்தில் வெளித் தலையீட்டை அவமானமாக கருதுவதாகவும் சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.

போர்குற்ற ஆதாரங்கள் தொடர்பான காட்சிகளை நம்பவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ள கருத்து தொடர்பில் சந்திக்கா கூறுகையில், ஆவணத் தயாரிப்பாளர்கள் ஆதாரத்தை காண்பிக்கும் போது விசாரணையாளர்களிடம் ஆவணங்கள் கையளிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஆவணங்கள் முன்வைக்கப்பட்டால் ஜனாதிபதி அதனை பார்வையிட முடியும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார். (ad)

Related Post