இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை விமர்ச்சனம் செய்த சுவீடன் வெளியுறவு அமெச்சருக்கும் சுவீடன் அரசுக்கும் கடுமையான நெருக்கடிகளை சவுதி அரேபியா கொடுத்து வருவதால் சுவீடன் மன்னர் 16ஆம் கார்ல் கோஸ்தப் (Carl XVI Gustaf) கவைலை கொண்டிருப்தாகவும்
இது தொடர்ப்பாக விவாதிப்பதர்கும் இஸ்லாத்தை விமர்ச்சித்த சுவீடன் வெளியுறவு துறை அமைச்சர் மார்கட் அவர்களை கண்டிப்பதர்கும் அவர் விமர்ச்சனங்களை திரும்பபெற வலியுறுத்தவும் சவுதி அரேபியாவை சமாதான படுத்துவதர்கு உரிய வழிகளை ஆராயவதர்காகவும் சுவீடன் வெளியுறவு துறை அமைச்சரை சுவீடன் மன்னர் அழைத்திருப்பதாக மன்னரின் அரண்மனை செய்தி தொடர்பாளர் இன்று செய்தாயாளர்களிடம் தெரிவித்தார்
மேலும் அவர் கூறும் போது
அனைத்து நாடுகளுடனும் சுவீடனுக்கு நல்லுறவு இருக்க வேண்டும் என்று சுவீடன் மன்னர் விரும்புகிறார்
குறிப்பாக மத்திய கிழக்கில் மட்டும் இன்றி உலகிலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாடாக சவுதி அரேபியா இருப்பதால் அந்த நாட்டை பகைத்து கொள்வது சுவீடனுக்கு எந்த நண்மையையும் பெற்று தராது என்று சுவீடன் மன்னர் கருதுவதாகவும் மன்னரின் அரண்மனை தகவல் தொடர்ப்பாளாரை மேர்கோள் காட்டி ஸ்வீடிஸ் என்ற சுவீடன் பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டுள்ளது