Breaking
Fri. Nov 14th, 2025

அப்துல்லாஹ்

சவூதி அரேபியா றியாத் நகரில் (27) திங்களன்று இடம்பெற்ற நடந்த வாகன விபத்தில் மட்டக்களப்பு ஓட்டமாவடியைச் சேர்ந்த புஹாரி பாஸில் (வயது 28) எனும் இளைஞர் மரணமடைந்து விட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாகவே இவர் தொழில் வாய்ப்பின் நிமித்தம் இலங்கையிலிருந்து சவூதி அரேபியா றியாத் நகரிலுள்ள கம்பனி ஒன்றுக்கு சென்றதாகவும் அவ்வேளையில் இந்த வாகன விபத்தில் சிக்கி மரணமடைந்து விட்டதாகவும் உறவினர்கள் மேலும் தெரிவித்தனர்.

சடலத்தை சவூதி அரேபியாவின் றியாத் நகரிலேயே அடக்கம் செய்வதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டிருப்பதாகவும் உறவினர்கள் கூறினர்.

Related Post