இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை சவூதி அரேபியா தம்முடைய அரசியல் சாசன சட்டமாக வைத்திருப்பது ஏற்க கூடியது அல்ல என்று ஸ்வீடன் வெளியுறவுத்துறை அமைச்சர் அண்மையில் கூறியிருந்தார்.
மேலும் சவூதி அரேபியாவுடனான ராணுவ நடவடிக்கை ஒப்பந்தத்தையும் புதுப்பிக்க போவதில்லை என்றும் கூறியிருந்தார்.சுவீடனின் இந்த கருத்திற்கு சவூதி அரேபியா பதிலடி கொடுக்கும் விதமாக….
எங்களிடம் இஸ்லாம் இருக்கிறது, இஸ்லாத்திற்கு நாங்கள் யாரிடமிருந்தும் நன்னடத்தை சான்றிதழை எதிர்பார்க்கவில்லை.
எங்களது உள்நாட்டு விவகாரத்தில் தலையை நுழைத்துள்ள சுவீடனை கடுமையாக கண்டிக்கும் விதமாக சுவீடனிலிருந்து சவூதி அரேபிய தூதரை திரும்ப அழைத்து சுவீடனுடனான அனைத்து உறவையும் முறித்துக் கொண்டது.
மேலும் சுவீடனின் வியாபாரிகளுக்கு சவூதி அரேபியாவுக்கு விசா கிடையாது என்றும் விசா கொடுத்தவர்களுக்கு இனி விசா நீட்டிப்பு கிடையாது என்றும் கடும் நெருக்கடியை கொடுத்தது.அதேப்போல் சவூதி அரேபியாவை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகமும் தனது தூதரை திரும்ப பெற்றுக் கொண்டது.சவூதி அரேபியாவின் தொடர் நெருக்கடிகளுக்கு ஆளான சுவீடனின் பொருளாதாரம் நிலை குலையும் அளவுக்கு சரிந்தது.
இதனால் வேதனை கொண்ட ஸ்வீடன் மன்னர் சவூதி அரேபியாவுடன் மீண்டும் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதற்கு தயாராக இருப்பதாகவும், இஸ்லாத்தை விமர்ச்சித்த சுவீடன் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கட்டை கண்டிப்பதற்கும், அவரது கருத்தை வாபஸ் பெறுவதற்கும் ஸ்வீடன் தயாராக இருப்பதாக ஸ்வீடன் மன்னர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் ஸ்வீடன் உலக நாடுகளுடன் ஸ்வீடன் நல்லுறவையே பேண விரும்புவதாகவும் அதிலும் குறிப்பாக மத்திய கிழக்கில் மட்டுமின்றி உலகிலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்த நாடாக சவூதி அரேபியா இருப்பதால் அந்த நாட்டை பகைத்துக் கொள்வது ஸ்வீடனுக்கு எந்த நன்மையும் பெற்று தராது என்று மன்னர் கருதுவதாக மன்னர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.
உலகிலுள்ள 200 கோடி முஸ்லிம்களின் உயிருக்கு மேலாய் நேசிக்கும் இஸ்லாமிய சட்டத்தை விமர்சித்த ஸ்வீடனுக்கு தக்க பதிலடி கொடுத்த சவூதி அரேபியாவுக்கு கண்ணியத்தையும் வெற்றியையும் கொடுத்த ஏக இறைவனுக்கே எல்லா புகழும்…