Breaking
Sun. Jun 15th, 2025

அமெரிக்காவின் ஆளில்லா விமானமான டிரோன் விமானம் ஒன்றை செவ்வாய்க்கிழமை சிரியாவில் அரச படைகள் சுட்டு வீழ்த்தியதை அமெரிக்க அதிகாரிகள் இன்று புதன்கிழமை உறுதிப் படுத்தியுள்ளனர்.

இது குறித்துத் தனது அடையாளத்தை வெளிப்படுத்தாத அதிகாரி ஒருவர் அளித்த தகவலில் இந்த விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப் பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். எனினும் இச்சம்பவம் குறித்து அமெரிக்க இராணுவம் இன்னமும் எக்கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ராய்ட்டர்ஸ் செய்தித் தாபனத்துக்கு இது குறித்து சிரிய இராணுவம் அளித்த செய்தியில் சிரியாவின் மேற்குப் பகுதியில் லட்டாகியா மாகாணத்தில் சிரிய வான் பாதுகாப்பு ஆயுதம் ஒன்றினால் குறித்த டிரோன் விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டதாக கூறப்பட்டுள்ளது. விசாரணையின் போது டிரோன் விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டது உறுதியானால் ISIS மீதான போர் ஆரம்பித்தது தொடக்கம் முதன் முறை அமெரிக்க விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப் பட்ட சம்பவமாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிரியாவின் சனா செய்தி ஏஜன்ஸி அமெரிக்க டிரோன் கண்காணிப்பினை சட்ட விரோதம் என்று செய்தி வெளியிட்டிருந்தது.

Related Post