Breaking
Sun. Jun 15th, 2025

உள்நாட்டு போரினால் சிரியா மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மக்களை மொத்த உலகமும் கைவிட்டு விட்டதாக ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன் வேதனை தெரிவித்துள்ளார்.

2011-ல் சிரியாவில் அமைதியான வழியில் அந்நாட்டு அரசுக்கு எதிராக ஆரம்பித்த மக்கள் போராட்டம் பெரும் உள்நாட்டு போராக வெடித்தது. இதன் காரணமாக இன்று வரை அந்நாட்டு அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

நான்கு ஆண்டுகளையும் கடந்து ஐந்தாவது ஆண்டில் நுழையவிருக்கம் இப்போரில் இதுவரை 2 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாகவும், 4 மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் அகதிகளாக பக்கத்து நாடுகளுக்கும், 7.6 மில்லியன் மக்கள் அந்நாட்டிற்குள்ளாகவே அகதிகளாகியிருப்பதாகவும் பான் கீ-மூன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

குறிப்பாக ஐ.நா.வின் பாதுகாப்பு சபையில் நிலவும் கருத்து வேறுபாடு மற்றம் ஒற்றுமையின்மையும் தவிர்த்துவிட்டு அம்மக்களை காக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், நிவாரண உதவிகள் செய்வதற்கான போதுமான நிதியையும் திரட்ட முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.ன் பாதுகாப்பு சபையின் நிரந்திர உறுப்பினராக இருக்கும் ரஷ்யா, சிரியா அதிபர் அசாத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா.வின் முன்னாள் அதிகாரி ஒருவர் கூறும்போது, “நமது கொள்கைகள் அம்மக்களுக்கு துரோகம் இழைத்து வருகிறது. நிச்சயமாக 2015-லிலும் அவர்கள் கொல்லப்படுவதை பார்த்து கொண்டிருக்க முடியாது” என்று தெரிவித்தார்.

Related Post