Breaking
Sun. Jun 15th, 2025

இலங்கையின் 67 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பு அடிப்படையில் சிறை கைதிகள் சிலர் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

சிறை தண்டனை பெற்று வரும் 75 வயதிற்கு மேற்பட்டவர்கள் நாளை (04) விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் போது சிறு குற்றங்களிற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள், மற்றும் தண்டப்பணம் செலுத்த முடியாதவர்களே விடுதலை செய்யப்படவுள்ளனர்.

மேலும் தற்போது சிறை தண்டனை பெற்றுள்ளவர்களின் சிறை தண்டனை காலத்தில் ஒரு வாரத்தை குறைப்பதற்கும் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Post