Breaking
Sat. Jun 21st, 2025
சீனாவுக்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதிக்கு தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் வெளிவிவகார அமைச்சர் லியோன் ஜியென்சாவோ வரவேற்றார்.
இலங்கை விமானசேவைக்கு சொந்தமான யுஎல் 868 விமானத்தினூடாக நேற்று பிற்பகல் 1.20 மணியளவில் ஜனாதிபதி – அவரது பாரியார் ஜயந்தி சிரிசேன உட்பட பிரதிநிதிகள் குழுவினர் சீனா நோக்கி சென்றனர்.
இவ்விஜயத்தின் போது இரு நாடுகளின் தலைவர்களுக்கிடையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதுடன் ஒப்பந்தங்கள் பலவும் கைச்சாத்திடப்படவுள்ளன. சீன ஜனாதிபதி வழங்கும் விசேட விருந்துபசாரத்திலும்  ஜனாதிபதி உட்பட பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
எதிர்வரும் 28ஆம் திகதி சீனாவில் ஆரம்பமாகவுள்ள போஆ சர்வதேச மாநாட்டிலும் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார். இதில் ஆசிய அபிவிருத்தி  மற்றும் பொருளாதார திட்டம் தொடர்பிலும் சர்வதேசத்தை ஜனாதிபதி தெளிவுபடுத்தவுள்ளார்.
ஜனாதிபதி சீன பிரதமர் லீ க்வென்க் மற்றும் சீன மக்கள் தேசிய காங்கிரஸின் நிர்வாகக்குழு தலைவர்  பேஜியென் ஆகியோருடனும் கலந்துரையாடவுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர- அமைச்சர்களான பாடலி சம்பிக்க ரணவக்க- ராஜித்த சேனாரத்ன- ரவி கருணாரத்ன- ரவுப் ஹக்கீம்- விஜயதாஸ ராஜபக்ஷ- பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா உட்பட பிரதிநிதிகள் பலர் ஜனாதிபதியுடன் சீனாவுக்கு விஜயம் செய்துள்ளனர்.
பெய்ஜிங் சர்வதேச விமானநிலையத்தில் இடம்பெற்ற வரவேற்பில் சீனாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ரஞ்சித் உயங்கொடவும் கலந்துகொண்டார்.

Related Post