செல்வநகர் மக்கள் சந்திப்பில் டாக்டர்.ஹில்மி மஹ்ரூப் பங்கேற்பு!

0
1176

-ஊடகப்பிரிவு-

தோப்பூர், செல்வநகரில் இன்று மாலை (29) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் விவகாரப் பணிப்பாளரும், கிண்ணியா முன்னாள் மேயருமான டாக்டர். ஹில்மி மஹ்ரூப் பங்கேற்றார்.

இங்கு உரையாற்றிய அவர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்திலே அதிகமான வட்டாரங்களைக் கைப்பற்றும் வாய்ப்பை இறைவன் ஏற்படுத்தித் தருவான். சிறுபான்மை மக்களின் சேவைத் தலைவராக மக்கள் பணியாற்றி வரும் மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்காக துஆ செய்யுங்கள் என்றும் வேண்டிக்கொண்டார். மேலும், மயில் சின்னத்திற்கு உங்கள் வாக்குகளை வழங்கி, உங்கள் பிரதேசத்தின் அபிவிருத்திகளை மேம்படுத்துவதற்காக மக்கள் காங்கிரஸுடன் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதன்போது, தேர்தல் முன்னெடுப்புகள் மற்றும் சமகால அரசியல் களநிலவரங்கள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here