நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (25) சீனா செல்லவுள்ளார்.
இவ்விஜயத்தின் போது சீன ஜனாதிபதி ஜி ஜிங் பிங் உட்பட பல சீன அரச பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீன அரசினால் இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் இரு அரச தலைவர்களும் கவனம் செலுத்தவுள்ளனர்.