Breaking
Sun. Jun 15th, 2025

பொதுநலவாய தின நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் மகாராணியாரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இலங்கை ஜனாதிபதிக்கு மகாராணியார் இன்று உத்தியோகபூர்வ வரவேற்பளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பிரித்தானிய பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இந்த சந்திப்புக்களின்போது இரண்டு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் தர்மஸ்ரீ பண்டார ஏக்கநாயக்க தெரிவித்தார்.

தனது விஜயத்தின்போது ஜனாதிபதி கலந்துகொண்ட அனைத்து நிகழ்வுகளிலும் அவருக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் கூறினார். பொதுநலவாய தின நிகழ்வில் கலந்துகொண்ட அரச தலைவர்கள் பலரையும் சந்தித்து ஜனாதிபதி ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தார்.

புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக இந்த சந்திப்புக்களின்போது தெரிவிக்கப்பட்டதாக  ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் குறிப்பிட்டார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரித்தானிய விஜயம் இன்றுடன் நிறைவுபெறவுள்ளது.

Related Post